கோவையில் விதிகளை மீறி பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்கள் அகற்றம்!

கோவை மாநகரில் தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன்கள் பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவல்துறையினர் அகற்றி பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறி 12 தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர் ஹாரன்களை போக்குவரத்து காவலர்கள் அகற்றி பறிமுதல் செய்தனர். 

கோவை மாநகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் “ஏர் ஹாரன்” பொருத்தி வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது. 

இதையடுத்து மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் மதிவாணன் உத்தரவின் பேரில், கோவை மாநகரம் முழுவதும் போக்குவரத்து காவலர்கள் கண்காணிப்பை தீவிரபடுத்தினர். 

இதில் போக்குவரத்து விதியை மீறி அதிக அளவு ஒலி எழுப்பக்கூடிய “ஏர் ஹாரன்களை” பொருத்திய பேருந்துகளை கண்டறிந்து அந்த பேருந்துகளில் பொருத்தி பொருத்தியுள்ள ஹாரன்களை அகற்றி வருகின்றனர். 



அதன்படி கோவை காந்திபுரம், உக்கடம் பேருந்து நிலையங்களுக்கு வந்த தனியார் பேருந்துகளை சோதனை செய்தனர். 



அப்போது, 12 தனியார் பேருந்துகளில் பொருத்திருந்த “ஏர் ஹாரன்களை” அகற்றி பறிமுதல் செய்தனர். ஏற்கனவே இது குறித்து போலீசார் எச்சரித்திருந்த நிலையில் மீண்டும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தி பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதமாக வசூல் செய்யப்படும் எனவும் அதனை தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...