கணவரை தாக்கி சொத்துக்களை அபகரிக்க முயன்ற மனைவி - ஆட்சியர் அலுவலகத்தில் புகார்!

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி தங்கமணி, அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தனது சகோதரிக்கு தான் எழுதி கொடுத்த நிலத்தை அபகரிக்க முயன்று தன்னை தாக்கியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.



திருப்பூர்: தன்னை தாக்கி தனது சொத்துக்களை அபகரிக்க முயன்றதாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனைவி மீது கணவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தங்கமணி என்பவரை திருமணம் செய்துள்ளார். முருகேசன் தனக்கு சொந்தமான 3.25 செண்ட் நிலத்தில் வீடு கட்டி இருந்த நிலையில், இருவரும் அதில் வசித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் தங்கமணிக்கு உடல்நிலை சரியில்லாததால் முருகேசன் பல இடங்களில் கடன் பெற்று அவருக்கு சிகிச்சை பார்த்து வந்துள்ளார். மேலும் தனது சகோதரி மல்லிகாவிடம் பெற்ற கடனுக்காக தனது வீட்டை சகோதரி பெயரில் கிரயம் செய்துவிட்டு மேற்கொண்டு சிகிச்சைக்காக 4 லட்சம் பெற்றுள்ளார்.

இதனிடையே தனது சகோதரிக்கு வீட்டை கிரயம் செய்து விட்ட நிலையில் தன்னை விட்டு பிரிந்து சென்று வாழ்ந்து வரக்கூடிய தங்கமணி கடந்த சனிக்கிழமை அவரது உறவினர்களோடு சகோதரியின் வீட்டில் அத்துமீறி நுழைந்துள்ளார். 



இது குறித்து தான் கேட்க சென்றபோது தன்னை தாக்கியது மட்டுமல்லாமல் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...