கோவையில் இருந்து ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்த முயற்சி - 2 பெண்கள் கைது

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசியை கடத்திச் செல்ல முயன்ற கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்த குடிமைப் பொருள் வழங்கல் துறையினர், அவர்களிடம் இருந்து 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர்.



கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு கடத்தப்பட இருந்த 300 கிலோ ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். 

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறை தலைவர் காமினி உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதிலும் பொது விநியோக திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இதன்படி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ரயில்கள் மூலம் அரிசி கடத்தும் நபர்களை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் நேற்று (05.06.2023) காலை 08.00 மணிக்கு கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். 

இந்த சோதனையின் போது, நடைமேடை 3 ல் அடுக்கி வைத்திருந்த சுமார் 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றப்பட்டது.



மேலும், அதனை ரயிலில் கடத்த தயாராக இருந்த கோவையை சேர்ந்த அமுதா (40) மற்றும் கேரளாவை சேர்ந்த ஜோதி (62) ஆகியோரை கைது செய்தனர். 

தொடர்ந்து நடத்திய விசாரணையில், போத்தனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசிகளை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா செல்லும் ரயில்கள் மூலமாக கேரள கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...