சூலூரில் புதிய அனைத்து மகளிர் காவல்நிலையம் திறப்பு - மேற்கு மண்டல ஐ.ஜி திறந்து வைத்தார்!

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, சூலூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. இதனை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை: பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கோவை சூலூரில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கருமத்தம்பட்டி உட்கோட்டத்துக்குட்பட்ட சூலூர், கோவில்பாளையம், செட்டிபாளையம், சுல்தான்பேட்டை ஆகிய பகுதிகளில் மகளிர் காவல் நிலையம் இல்லாததால் மகளிர் சார்ந்த புகார்களை அளிக்க பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டிய சூழல் நிலவி வந்தது.

இந்நிலையில் சூலூரில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் சூலூர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடத்தில் தற்காலிகமாக புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் நிறுவப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது.



இந்நிகழ்வில் கோவை எஸ்.பி பத்ரி நாராயணன், ADGP சங்கர், கோவை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், கோவை சரக DIG விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய மகளிர் காவல் நிலையத்தை கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக மகளிர் காவலர்கள் மற்றும் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சுமதி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.



கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் புதிதாக திறக்கப்பட்ட காவல் நிலையத்தில் கைதிகள் அறை கணினி அறை ஆகியவற்றை பார்வையிட்டார். மேலும் இந்த புதிய மகளிர் காவல் நிலையத்தில் முதற்கட்டமாக ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் ஏழு மகளிர் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.



இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பேசியதாவது, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவுப்படி, கருமத்தம்பட்டி உட்கோட்டத்திற்குட்பட்ட சூலூர் காவல் நிலைய வளாகத்தில் இந்த புதிய காவல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

விரைவில் ஒப்புதல் தரப்பட்டு புதிய கட்டிடம் திறக்கப்படும். மேலும் அனைத்து குற்ற வழக்குகளும் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளும் சைபர் குற்றங்களும் இங்கு விசாரிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...