மதுக்கரையில் சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை வழங்க லஞ்சம் தர மறுத்த இருவரை பணியிட மாற்றம் செய்த மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவு திட்ட ஆணையரை கண்டித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை பிச்சனூர் அரசு பள்ளி அமைப்பாளராக பணியாற்றி வந்த சோமசுந்தரம் மற்றும் சுந்தராபுரம் செங்கோட்டையார் அரசு பள்ளி அமைப்பாளர் நாகமணி ஆகிய இருவரையும் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய சத்துணவுத் திட்ட ஆணையர் கணேசன் பணியிடமாற்றம் செய்துள்ளார்.

இந்த பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக உணவு ஊட்டச்சத்து செலவின தொகையை அமைப்பாளர்களுக்கு வழங்க சத்துணவு திட்ட ஆணையர் கணேசன், லஞ்சம் கேட்டதாகவும், அந்த லஞ்சத்தை தர மறுத்த சோமசுந்தரம் மற்றும் நாகமணி ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே உடனடியாக அவர்களது பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு திட்ட ஆணையர் கணேசனை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். மேலும் வரும் 20 ஆம் தேதிக்குள் பணியிட மாற்றத்தை ரத்து செய்யவில்லை என்றால், அடுத்த கட்டமாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

ஒன்றிய தலைவர் ஆனந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நித்திய பிரியா, ஜெகநாதன் உள்ளிட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...