கோவை கரும்புக்கடை அருகே சந்தேகத்திற்கிடமான 2 வீடுகளில் போலீசார் திடீர் சோதனை!

கோவை மாவட்டம் கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகியோரின் வீடுகளில் இன்று காலை முதல் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கரும்புக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமான இருவரின் வீடுகளில் மாநகர போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகள் நடப்பதாக கோவை மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் கோவை மாநகர போலீசார், சுலைமான் மற்றும் அப்துல்காதர் ஆகிய இருவரின் வீடுகளில் இன்று காலை 7 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில் இருவர் வீடுகளில் இருந்தும் செல்போன் உள்ளிட்ட சில ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...