துடியலூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!

கோவை துடியலூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்த மணிவண்ணன், சுதாகர், கிரண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீசார் 1.5 கிலோ கஞ்சா மற்றும் 4 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் துடியலூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் நேற்று துடியலூர் சுற்று வட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் துடியலூர் சரவணம்பட்டி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போதை பொருளான கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த மணிவண்ணன், சுதாகர், கிரண் உள்ளிட்ட 3 இளைஞர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா, கஞ்சா ஆயில் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...