வால்பாறையில் தீவிபத்திற்குள்ளான உணவகம் - நிதியுதவி வழங்கிய எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் செயல்பட்டு வந்த உணவகம் தீவிபத்தில் சிக்கிய நிலையில், கடையை மீண்டும் அமைக்க முடியாமல் இருந்த உணவக உரிமையாளருக்கு எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி நிதியுதவியை வழங்கினார்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீப்பிடித்து எரிந்து சேதம் அடைந்த உணவகத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நிதி உதவியை வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் புதிய பேருந்து நிலையம் அருகில் சத்தியபாமா என்பவர் சிட்டி ஹோட்டல் என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 21 ஆம் தேதி இரவு இந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு மூன்று லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

இதனிடையே, கடையை சரி செய்ய முடியாமலும், புதிய பொருட்கள் வாங்க முடியாமலும் கடையின் உரிமையாளர் சத்தியபாமா இருந்து வந்தார்.

இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி வால்பாறை பகுதிக்கு வந்து தீப்பிடித்து சேதம் அடைந்த ஹோட்டல் உரிமையாளரிடம் கடையை மீண்டும் கட்டுவதற்கு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு நிதி உதவி வழங்கினார்.

இந்நிகழ்வில் வால்பாறை அதிமுக நகர மன்ற செயலாளர் மயில் கணேசன், பொன் கணேசன் மற்றும் பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...