வால்பாறை அரசு மருத்துவமனையில் நகர மன்ற துணைத்தலைவர் ஆய்வு - குறைகளை கேட்டறிந்தார்!

வால்பாறை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நகர மன்ற துணைத்தலைவர் செந்தில்குமாரிடம், மருத்துவமனையில் ஆள்பற்றாக்குறை இருப்பதாகவும், அனைத்து வேலைகளையும் மருத்துவர்களும், செவிலியர்களும் செய்து கொண்டே மருத்துவம் பார்க்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் நகர மன்ற துணைத்தலைவர் தா.மா செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வால்பாறை அரசு மருத்துவமனையில் தூய்மையின்றி சீர்கேடாக உள்ளதாக பொதுமக்களிடையே புகார் எழுந்த நிலையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் மற்றும் நகர செயலாளர் சுதாகர் அறிவுறுத்தலின் பேரில் நகர மன்ற துணைத் தலைவர் தா.மா செந்தில்குமார் வால்பாறை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, 2 நாட்களுக்கு முன்பு வால்பாறை அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை சிகிச்சைக்காக தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளியின் தந்தையே மருத்துவமனையின் கழிவறையை சுத்தம் செய்ததாகவும் மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறையை சுத்தம் செய்யாமல் இருந்ததால் அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.



இது வால்பாறை பகுதியில் பேசுபொருளாக நிலவிவந்த நிலையில் நகரமன்ற துணைத் தலைவர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், மருத்துவமனை சுகாதாரமற்று சீர்கேடாக காணப்பட்ட கழிப்பிடங்கள், முள் புதராக காட்சியளித்த மருத்துவமனை, கழிவுநீர் கால்வாய் போன்ற இடங்களை ஆய்வு செய்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மருத்துவர் மகேஷ் ஆனந்திடம் மருத்துவமனையின் தேவைகளை கேட்டறிந்து சீர் செய்யப்படும் என்று தெரிவித்தார்.



நூறாண்டுக்கு மேல் இயங்கும் அரசு மருத்துவமனையில் தற்போது தூய்மை பணியாளர்கள், சமையலர், எலக்ட்ரீசியன், வாட்ச்மேன், மருத்துவ பணியாளர்கள் தற்போது வரை இல்லாத நிலையில் மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவர்கள் பல்வேறு வேலைகளை செய்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.

மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்பினால் எந்த பிரச்சினையும் வராது என்று மருத்துவர், நகர மன்ற துணைத் தலைவரிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக மருத்துவத்துறை மேலதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் வழங்கி உள்ளதாகவும் மருத்துவமனை ஆட்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்தார்.

மேலும் நகர மன்ற துணைத்தலைவர் தற்போது நகராட்சி மூலம் தூய்மை பணியாளர்களை மருத்துவமனைக்கு வேலைக்கு அனுப்புவதாகவும், மின் பழுதை சரி செய்யவும் கால்வாய் உடைப்பை சரி செய்வதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...