உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கோவையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி!

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நரசிம்மநாயக்கன் பாளையம் பேரூராட்சி பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்பினர் மற்றும் பேரூராட்சி இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. 

முதற்கட்டமாக பேரூராட்சி அருகில் உள்ள தனியார் பள்ளியில் பேரூராட்சி தலைவர் மரகதம் வீரபத்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி துணைத்தலைவர் சண்முகசுந்தரம் கவுன்சிலர்கள் ஸ்ரீதரன், ராஜேஸ்வரி, சித்ரா, ஜெயலட்சுமி, சாவித்திரி, பேரூராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து பேரூராட்சி பகுதிகள் முழுவதும் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் நகர் பகுதிகள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் என செயல் அலுவலர் வீரபாண்டியன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...