கோவையில் உள்ள 2 தலைமை தபால் நிலையங்களில் 12 மணி நேர சேவை!

கோவை கூட்செட் ரோட்டில் உள்ள கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல தலைமை தபால் நிலையத்திலும் 12 மணி நேர சேவை துவங்கப்பட்டுள்ளது. இவ்விரு தபால் நிலையங்களும் காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை இயங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை கோட்ட தலைமை தபால் நிலையம் மற்றும் மேற்கு மண்டல தலைமை தபால் நிலையம் ஆகிய 2 தலைமை தபால் நிலையங்களில், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.



கோவை கூட்செட் ரோட்டில் கோவை கோட்ட தலைமை தபால் நிலையமும், ஆர்.எஸ்.புரத்தில், மேற்கு மண்டல தலைமை தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரையில் சேமிப்பு வங்கி தொடர்பான சேவைகள் வழங்கப்பட்டன.

மாலை 4:00 மணி வரை மணி ஆர்டர் புக்கிங், இரவு 7:00 மணி வரை பதிவு தபால், பார்சல் விரைவு தபால் சேவைகள் வழங்கப்பட்டு வந்தன. வாடிக்கையாளர் வசதிக்காக, நேற்று முதல், இவ்விரு தலைமை தபால்நிலையங்களிலும், 12 மணி நேர சேவை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இனி காலை, 8:00 முதல், இரவு 8:00 மணி வரை, அனைத்து வகையான சேமிப்பு கணக்குகள், அஞ்சல் ஆயுள் காப்பீடு, பதிவு தபால், விரைவு தபால், பார்சல், வி.பி.எல்., வி.பி.பி., தபால் ஆகிய சேவைகளை, இவ்விரு தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...