ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்த திருப்பூர் சிறுவன்!

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்த அதர்வா என்ற 3 வயது சிறுவன் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடியுள்ளார். இதனை இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து, சிறுவனுக்கு சான்றிதழும், பதக்கத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது.



திருப்பூர்: அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ள 3 வயது சிறுவனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் தனபால் - ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு 3 வயதில் அதர்வா என்ற மகன் உள்ளார்.



இவர் குழந்தை பருவத்திலேயே பல திறமைகளுடன் வளர்ந்து வருவதை உணர்ந்து கொண்ட இவர்களது பெற்றோர் ஆத்திச்சூடி, திருக்குறள் போன்றவற்றை போதித்து வந்தனர். 



இந்நிலையில் அவ்வையார் எழுதிய ஆத்திச்சூடியை 30 விநாடியில் பாடி சாதனை படைத்துள்ளார் அதர்வா. இதனை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட் நிறுவனம் சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி கௌரவித்துள்ளது. 



இந்த சாதனை அவர்களது பெற்றோருக்கும் மட்டுமின்றி திருப்பூருக்கே கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...