கோவை மாநகராட்சி 15வது வார்டில் நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை திறப்பு!

கோவை மாநகராட்சி 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனை சுப்பிரமணியம்பாளையம் பெரியார் நகரில் தொடங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.



கோவை: கோவை மாநகராட்சியின் 15வது வார்டில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகர்புற நலவாழ்வு மைய மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கட்டப்பட்ட இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 



தொடர்ந்து 15வது வார்டு கவுன்சிலர் சாந்தமணி பச்சைமுத்து, உதவி நகரமைப்பு அலுவலர் விமலா, இந்த மையத்தின் மருத்துவர் ஹரிணி, கவுன்சிலர் உதவியாளர் சேக் அப்துல்காதர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். 



இந்த மருத்துவ மையத்தில் மருத்துவர், செவிலியர்கள், மருந்தாளுனர் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இருப்பார்கள் என்றும். அந்த நேரத்தில் நோயாளிகள் மருத்துவர்களை பார்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த மையத்தில் கர்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நல சேவைகள், குடும்ப நலம், நோயாளிகளுக்கான சிகிச்சைகள், பல் நோய்களுக்கான சிகிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட 12 சேவைகள் அளிக்கப்படுகின்றன. 

இதனை சுப்பிரமணியம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மனோஜ், திமுக கட்சி நிர்வாகிகள் பழனிச்சாமி, நடராஜன், ஆறுச்சாமி, சின்னையன், கணேசன், சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல், உதவியாளர் அன்பழகன், இளம் பொறியாளர் ஸ்ரீனிவாசன் மகேஷ், தொழில்நுட்ப உதவியாளர் தீபன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...