பல்லடம் அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது!

பல்லடம் சுற்றுவட்டார பகுதியான பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவிநாசிபாளையம், காமநாயக்கன் பாளையம் மற்றும் மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை மற்றும் பார்களில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகின. 

இந்த நிலையில் அப்பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தினர். கடந்த மூன்று நாட்களாக போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை கைது செய்துள்ளனர். 



அதன்படி பொங்கலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா மற்றும் முனியசாமி, திருப்பூரை சேர்ந்த மலையரசன் ஆகியோரை அவிநாசிபாளையம் காவல்துறையினர் கைது செய்தனர். 



மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். 

பல்லடம் சரக காவல் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனை குறைந்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கைகள் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...