வால்பாறையில் செக் மோசடி வழக்கில் 7 ஆண்டுக்கு பின் தீர்ப்பு!

வால்பாறை மின்சார வாரியத்தில் பணியாற்றிய முனீஸ்வரன் (35) என்பவர் மயில்சாமி (51) என்பவருக்கு கொடுத்த ரூ.2 லட்சம் வட்டி இல்லாத கடனுக்கு செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், 7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிக்கு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறையில் செக் மோசடியில் ஈடுபட்ட நபருக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் OC டிவிசனில் குடியிருந்து வருபவர் முனீஸ்வரன் (35). இவரது நண்பரான மயில்சாமி (51) என்பவர் உடுமலைப்பேட்டையில் மின்சாரத்துறை அலுவலகத்தில் போர் மேனாக பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் மயில்சாமி, வால்பாறை EB-யில் பணிபுரியும் போது கடந்த 2.11.2013 ஆம் ஆண்டு வட்டி இல்லாத கடனாக 2 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு அதனை மூன்று மாத தவணையில் திருப்பி தருவதாக கூறி உடுமலைப்பேட்டை கரூர் வைசியா பேங்க் கிளை காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். 

அந்த காசோலையை முனீஸ்வரன் என்பவர் அவர் கணக்கு வைத்துள்ள வால்பாறை யூனியன் பேங்க் இந்தியா வங்கியில் வசூலிக்க தாக்கல் செய்துள்ளார். மயில்சாமியின் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லை என்று கூறி காசோலை திரும்ப வந்துள்ளது, இதையடுத்து வால்பாறை வழக்கறிஞர் விஸ்வநாதன் மூலம் வழக்கு தொடர்ந்துள்ளார். 

இந்த வழக்கானது, கடந்த 17.1.2016 ஆம் ஆண்டு வால்பாறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, முனீஸ்வரனை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக தண்டனை வழங்க வேண்டும் என்றும், மயில்சாமியினால் பாதிக்கப்பட்ட முனிஸ்வரனுக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்குமாறு வாதிடப்பட்டது. 

கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று (8.6.2003) நீதிமன்றத்தில் வால்பாறை மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆர் செந்தில்குமார் தீர்ப்பு வழங்கினார். 



அதன்படி, முனீஸ்வரன் என்பவரை ஏமாற்றி மோசடி செய்த குற்றத்திற்காக எதிரி மயில்சாமிக்கு மூன்று மாதம் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அபராத தொகையிலிருந்து எதிரி மயில்சாமியினால் பாதிக்கப்பட்ட புகார்தாரர் முனீஸ்வரனுக்கு நஷ்ட ஈடாக ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம். ஒரு லட்சத்து 90 ஆயிரத்திற்கு புகார் மனு தாக்கல் செய்த 17.3.2016ஆம் தேதியிலிருந்து பணம் வழங்கும் தேதி வரை 9 சதவீதம் ஆண்டு வட்டியும் சேர்த்து கணக்கிட்டு வழங்க வேண்டும். அபராத தொகையை தொகையினை ஒரு மாத காலத்திற்கு செலுத்த தவறினால் மேலும் கூடுதலாக ஒரு மாதம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...