நெடுஞ்சாலை பட பாணியில் ஓடும் பேருந்தில் உடமைகளை திருடிய வடமாநில இளைஞர்கள்..! - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!

ஓடிசா மாநில நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்தில் சென்ற கோவையை சேர்ந்தவர்களின் உடைமைகளை நெடுஞ்சாலை பட பாணியில் ஓடும் பேருந்தில் இருந்து திருடிய வட மாநில திருடர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: கோவையை சேர்ந்த சுற்றுலா பேருந்தில் நெடுஞ்சாலை பட பாணியில் உடமைகளை திருடிய வட மாநில திருடர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களுக்கு சென்றனர்.

காசி, சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்ற அவர்கள் 7ம் தேதி இரவு  ஒரிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவில்களுக்கு சென்றுள்ளனர். இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்தில் உள்ள  தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர்.

அப்போது பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரிபார்த்த போது உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது.



இதனையடுத்து பேருந்தின் பின்பக்கம் பொருத்தியிருந்த சிசிடிவி  கேமராவை ஆய்வு செய்த போது அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவன் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த  உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது.



மேலும்  ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. ஆரி நடிப்பில் வெளியான நெடுஞ்சாலை திரைப்படத்தில் வரும் காட்சிகளை போல வடமாநில கொள்ளையர்கள் கோவையில் இருந்து சென்ற சுற்றுலா பேருந்தில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...