கோவையில் நண்பர்களிடையே குடிபோதையில் தகராறு - அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!

கோவை சுப்பிரமணியம்பாளையம் பகுதியில் நண்பர்கள் இருவருக்கு இடையே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் கோபிநாத் என்பவர் வெட்டியதில் அழகர்சாமி படுகாயமடைந்தார். இது தொடர்பாக கோபிநாத்தை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவையில் நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை சுப்பிரமணியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாயி என்கிற அழகர் சாமி. இவர் கார் வாட்டர் வாஷ் வேலை செய்து வருகிறார். இவரது நண்பர் கோழி என்கிற கோபிநாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.

இவர்கள் இருவரும் நேற்று அங்குள்ள ஒரு மதுபான பாரில் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபிநாத், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அழகர்சாமியை தலையில் வெட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கோபிநாத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தகவலறிந்த துடியலூர் காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அழகர்சாமியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...