கோவை அருகே அத்திகடவு – பில்லூர் பிரதான குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்!

கோவை பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கோடிக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில், உடைப்பை சரிசெய்யும் பணியின் காரணமாக 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது எனவும் அறிவிப்பு.

கோவை: பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திக்கடவு - பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. 

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு முதல் சுமார் 88 கோடி மதிப்பில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா முதல் வண்ணாங்கோவில் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் தினமும் வாகன நெரிசல்கள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஏற்படும் புழுதியில் தான் மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.

மேலும் அதே பகுதியில் பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அத்திக்கடவு –பில்லூர் குடிநீர் 1வது திட்டத்தில் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இன்று மாலை அந்த குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் ஆற்று வெள்ளம் போல பெரியநாயக்கன் பாளையத்தில் பெருக்கெடுத்து ஓடியது.



இதுகுறித்து உடனடியாக குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முக்கிய தண்ணீர் குழாயாக இருப்பதால் உடனடியாக தண்ணீரை நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக கோடிகணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது. இரவு நேரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்தினர் வேலை செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் வரும் 2 நாட்களுக்கு அத்திகடவு - பில்லூர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் இருக்காது என்று தெரிகிறது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் தங்கள் செல்போன்களில் வீடியோ, போட்டோ எடுத்து முகநூல், வாட்ஸ் ஆப்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...