கோவை அருகே காதலன் கொலை - காதலி தூக்கிட்டு தற்கொலை!

கோவை செட்டிப்பாளையம் அருகே கடந்த 5ஆம் தேதி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறச் சென்ற காதலனை, பெண்ணின் உறவினர் வெட்டிக்கொலை செய்த நிலையில், தனது கண்முன்னே காதலன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் விரக்தியடைந்த காதலி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.



கோவை: கோவை சுந்தராபுரம் அருகே காதலன் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது காதலி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (21) இவர் செட்டிபாளையம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்த தன்யா (20) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தன்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூற அவரது வீட்டிற்குச் சென்ற பிரசாந்தை தன்யாவின் உறவினரான விக்னேஷ் (29), என்பவர் வெட்டிக்கொலை செய்தார். 

இதையடுத்து கொலை செய்த விக்னேஷை செட்டிபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக பிரசாந்த் மற்றும் தன்யா இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் இருவர் மட்டும் தனியாக சென்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். 

இதையடுத்து பெரியோர்கள் முன்னிலையில் அடுத்த மாதம் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில், பிரசாந்த் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த தன்யா மறுநாள் இரவு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அதிதீவிர சிகிச்சை பிரிவில் தன்யாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் வீடு திரும்பினார். 



இந்நிலையில் காதலி கண்முன்னே, காதலன் வெட்டி கொலை செய்யப்பட்டதால் விரக்தியடைந்த காதலி தன்யா நேற்று மாலை 3 மணியளவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செட்டிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...