கோவை காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய மாணவி!

கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களை கண்ட ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படிக்கும் கோவை சேர்ந்த மாணவி, இந்த நூலகங்களுக்காக 200 புத்தகங்களை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று வழங்கினார்.



கோவை: கோவை மாநகர காவல்துறையின் தெருவோர நூலகங்களுக்கு 200 புத்தகங்களை வழங்கிய 12ஆம் வகுப்பு மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 

கோவையை சேர்ந்த மாணவி ஒருவர் ஐதராபாத்தில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கோடை விடுமுறைக்காக கோவை வந்துள்ள நிலையில், கோவை மாநகரக் காவல் துறை சார்பாக வைத்துள்ள தெருவோர நூலகங்களை பார்த்துள்ளார். 

இந்நிலையில் அந்த நூலகங்களுக்கு 200 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். அந்த புத்தகங்கள் தற்போது, தெருவோர நாலகங்கள் மற்றும் ஆட்டோ நூலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மாணவி ஏற்கனவே 12 வயதில் புத்தகங்களை வீடு வீடாக போய் சேகரித்து அந்த புத்தகங்களை நூலகங்கள் அமைப்பதற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்த மாணவி புத்தகங்களை சேகரித்து நூலகங்களை அமைப்பதற்கு எடுத்த முயற்சிக்காக இந்தியா முழுவதும் பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...