தமிழகத்தில் இருந்து கடந்த ஆண்டில் ரூ.3.26 லட்சம் கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி!

கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அதன்படி வட தமிழ்நாடு - ரூ.2,01,003 கோடி, மேற்கு தமிழ்நாடு - ரூ.99,037 கோடி, தென் தமிழ்நாடு - ரூ.23,471 கோடி, கிழக்கு தமிழ்நாடு - ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.



கோவை: கடந்த ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான நிதியாண்டில் தமிழகத்தில் இருந்து 3 லட்சத்து 26 ஆயிரத்து 711 கோடி அளவிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ஏப்ரல் 2022 - மார்ச் 2023 நிதியாண்டில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் ரூ. 3,26,711 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வட தமிழ்நாடுக்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,01,003 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேற்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.99,037 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தென் தமிழ்நாடுக்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.23,471 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு தமிழ்நாடுக்கு உட்பட்ட திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ரூ.2,815 கோடி மதிப்பிலான சரக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...