கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்துகொள்ள முடியாது எனக்கூறி ஏமாற்ற முயன்ற கோவை பிரஸ் காலனியை சேர்ந்த ஸ்ரீராம் (24) என்ற இளைஞரை போலீசார், போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



கோவை: கோவையில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கோவையில் தங்கி மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கும், கோவை பிரஸ் காலனியில் வசித்து வரும் ஸ்ரீராம் (24) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஸ்ரீராம் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த சில நாட்களுக்கு முன் குன்னூர் அழைத்துச் சென்று தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 

பின்னர் மீண்டும் கோவை வந்தவுடன் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என இளைஞர் கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுமி கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்த போலீசார் ஸ்ரீராமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...