கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பில் நவீன எண்ணெய் உற்பத்தி இயந்திரம் கொள்முதல்!

கோவை மத்திய சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் எண்ணெய்க்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ள நிலையில், கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.



கோவை: கோவை மத்திய சிறைக்கு ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் நவீன எண்ணெய் உற்பத்தி இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மத்தியசிறையில் உள்ள சிறைவாசிகளை நல்வழிப்படுத்தும் பொருட்டு கல்வி, யோகா, தியானம், தொழிற்பயிற்சி போன்ற பல்வேறு சீர்திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் அவர்கள் விடுதலைக்கு பிறகு சொந்தமாக தொழில் தொடங்கும் வகையில் சிறையில் இயங்கி வரும் தொழிற்கூடத்தில் சிறைவாசிகளால் போர்வை, துண்டு, கால் மிதி, கைக்குட்டை, ரெடிமேட் ஆடைகள், பினாயில், சோப் ஆயில், குளியல் சோப்பு, மெழுகுவர்த்தி, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பேக்கரி பொருட்கள், சணல் பை, ஊறுகாய், வற்றல் பை, போன்றவைகள் தயார் செய்ய உரிய பயிற்சியளிக்கப்பட்டு நல்ல முறையில் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 

சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிச்சந்தையில் பொதுமக்கள் குறைந்த விலைக்கு தரமான பொருட்கள் வாங்கி பயன்பெறும் வகையில் சிறை சந்தை திட்டத்தில் "Freedom" என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் பொருட்களில் சமையல் எண்ணெய் விற்பனை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

காவல்துறை இயக்குநரும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநரான அம்ரேஷ் புஜாரியின் அறிவுரையின்படி சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு ரூ.17 லட்சம் செலவில் 2 நவீன எண்ணெய் உற்பத்தி செய்யும் செக்கு இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.



இந்நிலையில், இந்த நவீன எண்ணெய் இயந்திரத்தின் மூலம் எண்ணெய் உற்பத்தி செய்யும் பணியானது, கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் ஜி.சண்முகசுந்தரம் மற்றும் சிறை கண்காணிப்பாளர் மா. ஊர்மிளா ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...