ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் நடைபயணம்!

கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி பல்லடம் அருள்புரத்தில் இருந்து உடுமலைப்பேட்டை வரை 55 கிலோ மீட்டர் மூன்று நாள் விவசாயிகள் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



திருப்பூர்: ஆனைமலை - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற கோரி விவசாயிகள் மேற்கொள்ளும் 55 கிலோ மீட்டர் நடைபயணத்தை கோவை எம்.பி பி.ஆர்.நடராஜன் தொடங்கி வைத்தார்.



கோவை - திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் ஆனைமலை நல்லாறு என்ற இடத்தில் அணையை கட்டி நீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடந்த ஆட்சியில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திட்ட வரைவு கொடுக்கப்பட்டு, ஆட்சி மாறியதும் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 



இந்த திட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றக் கோரி இன்று பல்லடம் அருகே அருள்புரத்தில் இருந்து "நம்ம நல்லாறு" என்ற நடைபயணத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தொடங்கியுள்ளனர். 



கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நடைபயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். 



இத்திட்டத்தை நிறைவேற்ற கோரி 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோஷங்கள் எழுப்பியவாறு அருள்புரத்தில் இருந்து நடைபயணத்தை தொடங்கி உள்ளனர். 



பல்லடம், கேத்தனூர், குடிமங்கலம் வழியாக மூன்று நாட்கள் இந்த நடைபயணத்தை மேற்கொண்டு உடுமலைப்பேட்டையில் நடைபயணத்தை முடிக்க உள்ளனர். 

இந்த நிகழ்வை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் பேசியதாவது, 



தமிழக முதல்வர் உடனடியாக கேரள அரசிடம் பேசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி ஆனைமலை நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளோம் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...