மதுபிரியர்களின் கூடாரமாக மாறி வரும் பல்லடம் நகராட்சி வளாகம்!

பல்லடம் நகராட்சி வளாகத்தின் கழிப்பறை அருகே மதுபாட்டில்கள் வீசப்பட்டு கிடந்த நிலையில், அங்கிருந்த பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்தின் மீது மதுபாட்டில்கள் இருந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் மதுபாட்டில்கள் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சியின் அலுவலக கட்டிடம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ளது. நகராட்சிக்கு நாள்தோறும் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்லும் நிலையில் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பறை அருகே மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வளாகத்தில் உள்ளே மது அருந்துகிறார்களா? அல்லது வெளி ஆட்கள் மது அருந்துகிறார்களா? என்பது புரியாத புதிராக உள்ளது. 



அங்கு வைக்கப்பட்டுள்ள பழைய பேனரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரது புகைப்படத்தின் மீது காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து நகராட்சி ஆணையர் விநாயகம் கூறியதாவது, 

நகராட்சி வளாகத்தில் போடப்பட்டுள்ள மது பாட்டில்களை சுத்தம் செய்து விட்டோம். வளாகத்தில் மது அருந்துவோர் யார் என்பது குறித்து கடந்த 15 நாட்களில் பதிவாகியுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...