தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்!

தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தொடங்கி வைத்தார்.



கோவை: தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

கோவை தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தூய்மை பணி முகாம் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். நகர் முதல் வளையங்குட்டை வரையில் நடைபெற்ற இந்த முகாமில் பெருமளவில் மக்கள் பங்களிப்புடன் இடங்களை சுத்தம் செய்தனர்.

குப்பையை தரம் பிரித்து கொடுத்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நீர் நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்து, நீர்நிலையின் கரைப் பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். 

தொடர்ந்து அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள், பேனர்களை அகற்றினர். அனுமதியின்றி கொட்டப்பட்ட கட்டுமான பொருட்களை, இடிப்பு கழிவுகளை அகற்றினர். பள்ளி கல்லூரிகளில் தூய்மை பணி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், இந்த நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். 

இதனையடுத்து, தூய்மை பணியாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் தொண்டாமுத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் கமலம் ரவி தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமேஷ்குமார் செய்திருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...