கார்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாற வாய்ப்பு - கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தகவல்!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'கார்பன் மாசில்லா மாவட்டம்' என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்று பேசிய கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, இந்த மாநாட்டில் பெறப்பட்ட பரிந்துரைகளைக் கொண்டு நீலகிரி மாவட்டத்தை கார்பன் மாசில்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கார்பன் மாசில்லா மாவட்டமாக மாற வாய்ப்புள்ளதாக கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 'காா்பன் மாசில்லா மாவட்டம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலா் சுப்ரியா சாஹூ கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, நீலகிரியில் வனப்பகுதி அதிகம் உள்ளதாலும் பல்லுயிா் பாதுகாப்பு மண்டலமாக இருப்பதாலும் இந்த மாவட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தியாவிலேயே காா்பன் மாசில்லா மாவட்டமாக நீலகிரி மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து தற்போது நடைபெற்ற மாநாட்டில் சுற்றுசூழல் வல்லுநா்கள், சா்வதேசப் பிரமுகா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அவா்கள் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளனா். 

அதில், நீலகிரி மாவட்டத்துக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருவதால் வாகன நெரிசல் ஏற்பட்டு காா்பன் வாயு அதிக அளவில் வெளியாகிறது. இதைக் கட்டுப்படுத்த மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவது, வனப்பகுதியை அதிகரிப்பது, பிளாஸ்டிக்கை தவிா்ப்பது உள்ளிட்ட பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டத்தில் எவ்வளவு காா்பன் வாயு வெளியேறுகிறது, அதை எப்படிக் குறைப்பது என்ற ஒருங்கிணைந்த திட்டம் 3 மாதங்களுக்குள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் கடந்த ஆண்டு நடப்பட்ட 3 கோடி மரக்கன்றுகளில் 80 சதவீத மரக் கன்றுகள் மக்கள் ஒத்துழைப்புடன் சிறப்பாக வளா்ந்துள்ளன.

தமிழகத்தில் 40 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலக் காடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 14 மாவட்டங்களில் 60 சதுர கிலோ மீட்டா் பரப்பில் உள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து அதைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றம் துறையின் இயக்குநா் தீபக் பில்ஜி, மாவட்ட ஆட்சியர் அம்ரித், தமிழக அரசின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...