மேட்டுப்பாளையம் அருகே கார் மின்கம்பத்தில் மோதி விபத்து - 3 பேர் காயம்

உக்கடம் அடுத்த கரும்புக்கடை பகுதியை சேர்ந்த நண்பர்கள் 8 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கல்லாறு அருகே வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று பேர் காயமடைந்தனர்.



கோவை: ஊட்டிக்கு சுற்றுலா சென்ற கோவை உக்கடத்தைச் சேர்ந்த வாகனம் மின்கம்பம் மீது மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்தனர்.

உக்கடம் அடுத்த கரும்புகடை பகுதியை சேர்ந்த நண்பர்களான அனஸ் (20), ஹபீஸ் (19), சிஹாப் (20), சன்சார் (20), சுகைல் (19), ஆசீர் (18), அரபாஸ் (19), இப்ராஹிம் (20) ஆகிய அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதனையடுத்து காரில் நண்பர்கள் அனைவரும் ஊட்டி சென்றனர். காரை இப்ராஹிம் ஓட்டி சென்றார். ஊட்டி-குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த நண்பர்கள் மீண்டும் இன்று அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

அப்போது மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்தது. 



கார் மின்கம்பத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...