கோவை குமரகுரு கல்லூரியில் ‘காலநிலை நடவடிக்கையில் தொழில்நுட்பம்’ கலந்துரையாடல் நிகழ்வு!

கோவையில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் மற்றும் The Plantterra நிறுவனம் இணைந்து குமரகுரு கல்லூரி வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் ‘காலநிலை நடவடிக்கையில் தொழில்நுட்பம்’ (Y20 Talk on Climate Action) என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.

கோவை: கோவையில் உள்ள குமரகுரு கல்லூரி வளாகத்தில் Y20 Talk on Climate Action என்ற கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. 

குமரகுரு நிறுவனங்கள் மற்றும் The Plantterra நிறுவனம் இணைந்து குமரகுரு வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் Y20 Talk on Climate Action என்ற கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. 



இந்த நிகழ்வில், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6-ஆவது நிர்வாக இயக்குனரும், நார்வே அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு காலநிலை நடவடிக்கை குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினருமான எரிக் சோல்ஹிம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். 

மேலும் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அவர், காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

"காலநிலை நடவடிக்கையில் தொழில்நுட்பம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த கலந்துரையாடல் நிகழ்வில், Cognizant நிறுவனத்தின் இந்திய தலைவர், பாலகுமார் தங்கவேலு, தொகுத்து வழங்கினார். 

வெர்சா ட்ரைவ்ஸ் ப்ரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனரான சுந்தர் முருகானந்தம், ProClime தலைமை நிர்வாக அதிகாரியான கவின் குமார் கந்தசாமி மற்றும் Beyond Sustainability-யின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹரி ப்ரசாத் ஆகியோர் கலந்துகொண்டு. காலநிலை நடவடிக்கைகளில் தொழில் நுட்பத்தின் பங்களிப்பையும், பல்வேறு துறைகளின் முன்னெடுப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

"காலநிலை நடவடிக்கைக்கான காலநிலை கல்வியறிவு" அமர்வினை குமரகுரு நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன் தொகுத்து வழங்கினார். PSGCAS-இல் தகவல் தொடர்பின் தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ், சிறுதுளியின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரான சுஜனி பாலு மற்றும் அருளகத்தின் இணை நிறுவனரான பாரதிதாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த அமர்வில் கல்வி சூழலில் இயற்கை பாதுகாப்பையும், இளம் தலைமுறையின் பங்களிப்பை பற்றியும் எடுத்துரைத்தனர். காலநிலை நடவடிக்கையில் உள்ள பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை, இளைஞர்களிடம், தன்னார்வலர்களிடம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த நிகழ்வு அமையப்பெற்றது.



இந்த நிகழ்வில், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசியதாவது, எதிர்காலத்தில் இரு வகையான குற்றங்களை எதிர்பார்க்கிறோம். ஒன்று சைபர் மற்றும் AI சம்பந்தப்பட்ட குற்றங்கள், மற்றொன்று சுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட குற்றங்கள். எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வாகனங்களின் மூலமாக ஏற்படும் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதில் பொது போக்குவரத்து ஒரு முக்கிய பங்காற்றுகிறது. கோவை மாதிரியான பெருநகரங்களில் மாசு கட்டுப்படுத்துவதில் பொதுப் போக்குவரத்து உதவும். ஆனால் கோவையில் மட்டும் ஒரு ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டில் வருகின்றது.

மக்களை பொது போக்குவரத்தை பயன்படுத்த வைக்க வேண்டும் என்றால் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதில் மக்களை ஊக்கவிக்கும் வகையில், சாலையை மக்களுக்கு பாதுகாப்பாக வைப்பதில், காவல்துறையின் பங்கு மிக முக்கியமானது.

பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை தேவையாகும். பல நாடுகளில் அரசு விநியோகிக்கும் பொது குடிநீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்கின்றது. நம் நாட்டில் அந்த நிலைமாறி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரே கிராமங்களிலும் பாட்டல்களில் விநியோகம் செய்யப்படுகின்றது.இந்த நிலை மாற வேண்டும். 

மனிதகுலம் மட்டும் தான் தனது தேவைக்கும் அதிகமாக வளங்களை உபயோகித்து அளித்து வருகிறான். இதன் விளைவாக சுற்றுச்சூழலின் சமநிலை சீர்குலைகின்றது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு கட்டுக்குள் கொண்டு வர ஒவ்வொரு மனிதனின் பங்கீடு மிக முக்கியமானது. ஒவ்வொருவரும், தனிமனித தேவைகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தனது கார்பன் தடத்திற்கு ஈடாக மரங்களை வளர்க்க வேண்டும். 



இந்த நிகழ்வில், எரிக்சோல்ஹீம் பேசியதாவது, காற்றுறுதி மாற்றம் ஒரு பெரிய பிரச்சனையாகும், எங்கள் அறிவிப்புகளைக் கொண்டு விளையாடுவது மற்றும் ஆவணப்படுத்த வேண்டிய படைப்புகளை எடுக்க வேண்டும். காலநிலை மாற்றம் என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதன் விளைவுகளை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தற்காத்துக் கொள்வது அவசியம்.

ஜெர்மனி போன்ற நாடுகளில் உற்பத்தியாகும் மின்சக்தியால் இயங்கக்கூடிய நான்கு சக்கர வாகனங்கள் ஒரு தடவை சார்ஜ் செய்தால் கிட்டத்தட்ட 500 கிலோமீட்டர் தொலைவில் சார்ஜ் செய்யாமல் இயங்குகிறது. வரும் ஆண்டுகளில், மின் சக்தியாக கூடிய வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். 



சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்றால், காடுகள் சதுப்பு நிலங்கள் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட வேண்டும். இந்தோனேசியா போன்ற நாடுகளில் உலகத்திலேயே மிகப்பெரிய மலைக்காடுகள் உள்ளன. காரணம் அந்நாட்டில் இருக்கும் கடுமையான விதிமுறைகள் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...