கோவையில் 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு - உற்சாகமாக பள்ளிக்கு சென்ற மாணவர்கள்!

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து இன்று 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் இன்று பள்ளிகளுக்கு சென்றனர்.



கோவை: கோவையில் இன்று 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். 



தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜூன் 1-ந்தேதியும், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஜூன் 5-ந்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. 

ஆனால் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் மே மாதம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. மாறாக அதற்கு பிறகுதான் வெயில் அதிகமாக கொளுத்த தொடங்கியது. 

இதனையடுத்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது. எனவே பள்ளிகள் திறப்பை ஜூன் 7ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். 

ஆனாலும் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து நீடித்தது. எனவே பள்ளிகள் திறக்கப்படுவதை மேலும் தள்ளி வைக்குமாறு பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் பள்ளிகள் திறக்கப்படுவது 2ஆவது முறையாக மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் 2023-2024-ம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு இன்றும், 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு வருகிற 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.



இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் செய்து முடிக்கப்பட்டு, பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு பாடநூல்கள், நோட்டு - புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட இலவச நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...