பல்லடம் அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு!

பல்லடம் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் கடந்த மூன்று மாதமாக முறையான குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் திருப்பூர் - மங்களம் சாலையில் காலி குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: பல்லடம் அருகே முறையான குடிநீர் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் - மங்கலம் சாலையில் சுல்தான்பேட்டை பகுதி ஏ.டி காலனியில் கடந்த 3 மாதமாக குடிநீர் விநியோகம் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாகவும், மற்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறும் போது தங்களுக்கு உப்பு கலந்த நீரை மட்டுமே விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.



அதனை குடிநீராக பயன்படுத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வரும் அப்பகுதி மக்கள் 200க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் மங்கலம் சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இந்த நிலையில் திருப்பூர் - மங்கலம் பிரதான சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மங்கலம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் செய்ய முடியவில்லை எனவும் சீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெறுவதாகவும் ஓரிரு தினங்களில் குடிநீர் விநியோகம் துவங்கும் என உறுதி அளித்தனர்.

இதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...