பொள்ளாச்சி அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஒருவர் கைது!

பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு சரக்கு ஆட்டோ மூலம் கடத்த முயன்ற, 1,150 கிலோ அளவிலான ரேஷன் அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட சரக்கு ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பொள்ளாச்சி - தாவளம் சாலை ராமபட்டணம் சிவன் கோவில் அருகே குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

அதில், தமிழக அரசால் விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, 50 கிலோ எடை கொண்ட, 23 மூட்டைகளில் மொத்தம், 1,150 கிலோ இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, ஆட்டோவை ஓட்டி வந்த பாலக்காடு மூலத்துறை பள்ளிவாசல் வீதியை சேர்ந்த காதர் பாஷாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், பொள்ளாச்சி மாப்பிள்ளை கவுண்டன் புதுாரை சேர்ந்த சாதிக் அலி மற்றும் அஜித் ஆகியோர், மண்ணுார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் ரேஷன் அரிசி குறைந்த விலைக்கு வாங்கி கேரளாவில் கொழிஞ்சாம்பாறை தவ்பிக்கிடம் கள்ளசந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருமாறு கூறியது தெரிய வந்தது.

இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, கார் மற்றும் இரண்டு மொபட்டுகளை பறிமுதல் செய்த போலீசார், காதர்பாஷாவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சாதிக் அலி, அஜித், தவ்பிக் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...