சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது!

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு, சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் சூலூர் ரயில் நிலையம், மற்றும் பேருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த நபர் ஒருவர் கோவை சூலூர் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையத்தில் வெடிக்குண்டு வைத்திருப்பதாக சிலர் பேசிக்கொள்வதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து அவருக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து சூலூர் காவல் ஆய்வாளர் மாதையன் தலைமையிலான போலீசார் சூலூர் ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் மீண்டும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த செல்போன் எண் மீண்டும் ஆன் செய்யப்பட்டதால், செல்போன் சிக்னலை வைத்து சூலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்த முத்துகாதர் (29) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

உக்கடம் பகுதியில் இருந்து கடத்த 2 மாதங்களுக்கு முன் சூலூரில் குடியேறிய முத்துகாதர் மது போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து தவறான தவலை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...