கோவை சிங்கநல்லூரில் டாஸ்மாக்கை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் அருகேயுள்ள டாஸ்மாக் கடையால் கோவிலுக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம்சாட்டி அப்பகுதி மக்கள், டாஸ்மாக் கடையை அகற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சக்தி விநாயகர் கோவில் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிங்காநல்லூர் அடுத்த கமலா மில் குட்டை பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்துவிட்டு வரும் சிலர் கோவில் வாசலில் படுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மேலும், கடை மூடினாலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் அவ்வழியாக செல்வதாக கூறி டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், இதுதொடர்பாக ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...