கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு - 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை!

கடந்த 2018 ஆம் ஆண்டு பெரியார் சிலைகளை உடைப்போம் எனக்கூறிய எச்.ராஜாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தபெதிக-வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கோவை: கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தலா ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ல், தமிழகத்தில் உள்ள பெரியார் சிலைகளை உடைப்போம் என பேசிய பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் த.பெ.தி.க-வினர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்நிலையில் எச்.ராஜாவை கண்டித்து த.பெ.தி.க வை சேர்ந்த கோபால், ஜீவானந்தம், கவுதம் ஆகிய மூன்று பேரும் 2018 மார்ச் மாதம், கோவை வி.கே.கே மேனன் சாலையில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசினர்.

இது தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் 3 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை மற்றும் ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சசிரேகா உத்தரவிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...