கோவையில் ரூ.400 கோடி மதிப்பில் தார்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது - அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்!

கோவை மாநகராட்சியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2 ஆண்டுகளில்‌ கோவையில் பல்வேறு சாலைப்பணிகள்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றும், மேலும் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவு தெரிவித்தார்.

கோவை: கோவை மாநகராட்சியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.5 மற்றும்‌ 6க்கு உட்பட்ட வி.கே.வி.நஞ்சப்பா நகர்‌ பிரதான சாலை மற்றும்‌ குறுக்கு சாலைகள்‌ Four season பிரதான சாலைகள்‌, முத்தமிழ்‌ நகர (டாடாநகா்‌) குறுக்கு சாலைகளில்‌ ரூ.149.70 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ தார்சாலைகள்‌ அமைக்கும்‌ பணி‌கள், 



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌ 4, 10 மற்றும்‌ 11க்குட்பட்ட ரெவென்யூ நகர்‌, சிவ இளங்கோ நகர்‌, ராமாநந்தா நகர்‌, காந்தி வீதி, காமராஜர்‌ வீதி, டி.டி.ரெசிடென்சி, பிரதான சாலை மற்றும்‌ குறுக்கு சாலைகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத்திட்டம்‌ 2022-23ன்கீழ்‌ ரூ.197 லட்சம்‌ மதிப்பீட்டில்‌, தார்‌ தளம்‌ புதுப்பித்தல்‌ பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். 

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.68க்கு உட்பட்ட டாக்டர்‌.இராதாகிருஷ்ணன்‌ சாலை மற்றும்‌ 11 சாலைகள்‌ ரூ.180 லட்சம்‌ மதிப்பிட்டில்‌ தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள்‌ உள்கட்டமைப்பு (TURIP- 4) திட்டத்தின் கீழ்‌ தார்‌ தளம்‌ புதுப்பித்தல்‌ பணியினையும்‌, தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.87,88க்கு உட்பட்ட ஜெ.ஜெ.நகர்‌, பாலக்காடு பிரதான சாலை, அம்மன்‌ கோவில்‌ சாலை, லட்சுமி நகர்‌ முதல்‌ சிறுவாணி டேங்‌ வரை மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ்‌ ரூ.498 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மழைநீர்‌ வடிகால்‌ கட்டுமான பணிகளை அமைச்சா்‌ செந்தில்பாலாஜி பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்‌.

வடக்கு மண்டலம்‌ SUIDF திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில்‌ விடுபட்ட பகுதிகளில்‌ ரூ.19.34 கோடி மதிப்பீட்டில்‌ 6250 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள்‌, மையத்தடுப்பு சாலை மற்றும்‌ சாலை ஓரங்களில்‌ 1451 எண்ணிக்கையிலான புதிய தெருவிளக்கு கம்பங்கள்‌, ஆகமொத்தம்‌ 7701 எண்ணிக்கையிலான தெருவிளக்குகள்‌ அமைத்தல்‌ பணிகள், மின்சேமிப்பு கருவி (ESM Equipment) பொருத்துதல்‌ ஆகிய பணிகள்‌, 

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.80க்கு உட்பட்ட சீர்மிகு நகர திட்டத்தின் கீழ்‌ ரூ.53 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ பெரியகுளம்‌ திறந்த வெளி அரங்கம்‌ பகுதியில்‌ மறுசுழற்சி செய்யப்பட்ட திடக்கழிவுகளால்‌ உருவாக்கப்பட்ட டெலிபோன்‌, கிராமபோன்‌ மற்றும்‌ பாசி வடிவமைப்புகள்‌ உள்ளிட்ட கலை கட்டமைப்புகளை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி திறந்து வைத்து, பனைமரக்கன்று நட்டுவைத்தார்‌. 

அதனைத்தொடர்ந்து, மேற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.45க்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள எம்‌.ஜி.ஆர்‌. மொத்த காய்கனி மார்க்கெட்டில்‌ மூலதன மானிய நிதி 2022-23 திட்டத்தின்கீழ்‌ ரூ.307 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, 

மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.69க்கு உட்பட்ட அண்ணா மார்க்கெட்டில்‌ மூலதன மானிய நிதி 2022- 23 திட்டத்தின் கீழ்‌ ரூ.386 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌ அபிவிருத்தி பணிகளான சிமெண்ட்‌ கான்கிரீட்‌ தளம்‌, பழுதடைந்த கழிப்பிடத்தை அப்புறப்படுத்தி புதிய கழிப்பிடம்‌ கட்டுதல்‌, பாதாள சாக்கடை கட்டுதல்‌, 

மழைநீர் வடிகால்‌ புனரமைத்தல்‌, இருசக்கர வாகனம்‌ மற்றும்‌ சரக்கு வாகனம்‌ நிறுத்துமிடம்‌, எல்‌.இ.டி. தெருவிளக்குகள்‌, கூடுதல்‌ குடிநீர்‌ வசதி, மழைநீர்‌ சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை அமைச்சர்‌ செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். 

பணிகள்‌ முடிவுறும்‌ தருவாயில்‌ 250 விவசாயிகள்‌, 300-க்கும்‌ மேற்பட்ட மொத்த வியாபாரிகள்‌ பொதுமக்கள்‌ 2000 பேர் மற்றும்‌ 700 சிறு வியாபாரிகள்‌ பயன்பெறுவர்‌ என தெரிவித்துள்ளார்‌.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது, முதலமைச்சா்‌ ஆணைக்கிணங்க, கோவை மாநகராட்சி பகுதியில்‌ பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிய தார்‌ சாலைகள்‌ அமைப்பதற்காக ரூ.200 கோடி ரூபாய்‌ சிறப்பு நிதிகள்‌ வழங்கப்படுமென்று முதலமைச்சர்‌ அறிவித்த நிலையில், தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில்‌ 2 ஆண்டுகளில்‌ பல்வேறு சாலைப்பணிகள்‌ தொடங்கி வைக்கப்பட்டது.

அந்த பணிகள்‌ சிறப்பாக நிறைவுபெற்று மக்களின்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று முதலமைச்சர் ஆணைக்கிணங்க 173 கி.மீ. தொலைவிற்கான சாலைப்பணிகளுக்கு 71 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ பணிகள்‌ தொடங்கப்படுகின்றன. 

ஒட்டுமொத்தமாக 200 கோடி ரூபாய்‌ சிறப்பு நிதி முதலமைச்சர்‌ அறிவிப்பு வெளியிடப்பட்டு மாநகராட்சி சார்பில்‌ மட்டும்‌ கூடுதலாக 60 கோடி ரூபாய்‌ என மொத்தம்‌ 260 கோடி ரூபாய்‌ மதிப்பிலான சாலை அமைக்கும்‌ பணிகளுக்கு வழங்கி கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 578 கி.மீ. சாலை அமைப்பதற்கான நிதிகளை முதலமைச்சர்‌ வழங்கினார்‌.

மேலும்‌, ரூ.386 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ அண்ணா மார்க்கெட்‌ கடைகள்‌ கட்டுதல்‌, புதிய புனரமைப்பு பணிகள்‌ ரூ.307 லட்சம்‌ மதிப்பீட்டிலும்‌, எம்‌.ஜி.ஆர்‌ மாராக்கெட்‌ பணிகளுக்கான நிதிகளையும்‌ கூடுதலாக வழங்கி, இன்று பணிகள்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

2 ஆண்டுகளில்‌ மட்டும்‌ 1157 சாலைகள்‌, 578 கி.மீ. மொத்தம்‌ ரூ.260 கோடி மதிப்பீட்டில்‌ மாநகராட்சி பகுதிகளிலும்‌, நெடுஞ்சாலைத்துறையில்‌ 36 கி.மீ. ரூ.140 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ சாலைகள்‌ அமைக்கப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக மாநகராட்சி நிதி மற்றும்‌ நெடுஞ்சாலைத்துறையில்‌ நிதி மாநகராட்சி பகுதிகளில்‌ ரூ.400 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ 614 கி.மீ. தொலைவிற்கு சாலைகள்‌ அமைக்கும்‌ பணிகள்‌ தற்போது போர்க்கால அடிப்படையில்‌ நடைபெற்று வருகிறது. இப்பணிகள்‌ இரண்டு மாத காலத்திற்குள்‌ முடிக்கப்படும்‌.

கோவை மாநகராட்சியில்‌ மேயர்‌ தலைமையில்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ உள்ளிட்ட அதிகாரிகள்‌ பல்வேறு காலகட்டங்களில்‌ என்னென்ன சிறப்பு பணிகள்‌ எடுக்கப்பட வேண்டுமென பட்டியல்கள்‌ தயார்‌ செய்கின்றார்கள்‌. கோடை காலம்‌ முடிந்த பிறகு உடனடியாக அந்த சிறப்பு பராமரிப்பு பணிகளை சிறப்பு கவனம்‌ செலுத்தி, செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.‌

மழைகாலத்தை பொறுத்தவரைக்கும்‌ பெறும்பான்மையான பாதிப்புகளை குறைக்கும்‌ வகையில்‌ தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ எடுக்கப்படும்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...