கோவை, நீலகிரியில் மாணவ மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்பு

கோடை விடுமுறை முடிந்து இன்றைய தினம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை: கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று திறக்கப்பட்ட நிலையில், விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பேண்ட் வாத்தியங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

கோவை மாவட்டத்தில் 83 அரசு மேல்நிலைப்பள்ளி, 116 அரசு உயர்நிலை ப்பள்ளி, 232 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, 781 ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி என்று மொத்தம் 1,212 அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம் வரை மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்தது. இதனை தொடர்ந்து அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் கோவையில் பள்ளிகள் திறக்கப்பட்டன.

பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காலையிலேயே எழுந்து, புறப்பட்டு, புத்தக பையை எடுத்து கொண்டு பள்ளிக்கு சென்றனர். முதல் நாள் என்பதால் பெரும்பாலான மாணவர்களை அவர்களது பெற்றோர் பள்ளியில் கொண்டு வந்து விட்டு சென்றனர்.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு நுழைவு வாயிலில் ஆசிரியர்கள் நின்று ரோஜா பூ உள்ளிட்டவற்றை கொடுத்து, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சில பள்ளிகளில் மாணவர்களுக்கு பேண்ட் வாத்தியங்கள் உள்ளிட்ட இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்க ப்பட்டது. வரவேற்பு முடிந்ததும், மாணவர்கள் பள்ளிக்குள் சென்று தங்கள் வகுப்பறைகளுக்கு சென்றனர். அங்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது நண்பர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் கை குலுக்கியும், கட்டிபிடித்தும் அன்பை பரிமாறி கொண்டனர்.

பின்னர் விடுமுறையில் நடந்தவற்றை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தனர். பள்ளிகள் திறந்த முதல் நாளான இன்றே மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 

கோவை-திருச்சி சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளை சக மாண வர்கள் பேண்ட் வாத்தி யங்கள் முழங்க உற்சாக வரவேற்புடன் வரவேற்றனர்.

இதேபோல் மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளும் திறக்கப்பட்டது. அங்கு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் திறக்கப்பட்டது. காலை முதலே பள்ளிகளுக்கு மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் வந்த வண்ணம் இருந்தனர். பள்ளிகளில் மாணவர்களை ஆசிரி யர்கள் வரவேற்று வகுப்பறைக்கு அழைத்து சென்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...