நீலகிரி தலைகுந்தாவில் ஆட்சியர் தலைமையில் தூய்மை பாரத இயக்க முகாம்!

நீலகிரி மாவட்டம் தலைகுந்தா பகுதியில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் அம்ரித் தொடங்கி வைத்தார். பின்னர் சாலையோரங்களில் தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு குப்பைகளை சேகரித்தார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் தலைக்குந்தா பகுதியில் நடைபெற்ற தூய்மை பாரத இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் அம்ரித் துவங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட தலைகுந்தா பகுதியில் அனைத்து தரப்பினரும் இணைந்து மாபெரும் தூய்மை பணி முகாமை நடத்தினர். 

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்து தூய்மை பணியினை மேற்கொண்டார்.

இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கையுறை, குப்பைகளை சேகரிக்கும் சாக்குப்பை ஆகியவை வழங்கபட்டது. 

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் பேசியதாவது,

தூய்மை பாரத இயக்கத்தின் முக்கிய நோக்கமே ஒட்டுமொத்தமாக சுத்தம் செய்ய வேண்டும் என்பது தான். குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்தெடுத்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மீண்டும் சுழற்சி முறையில் உற்பத்தி செய்யவும் பயன்படுத்த வேண்டும்.

எனவே தூய்மை பாரத இயக்கத்தின் மூலம் உங்கள் பகுதியில் குப்பைகளை சேகரித்து வைத்தால் அதனை வந்து வாகனங்களில் எடுத்துச் செல்வார்கள். எனவே நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை உருவாக்க வேண்டும்.

ஊர் சுத்தமானால் தான் நாடு சுத்தமாகும். எனவே அனைவரும் குப்பையில்லா நகரை உருவாக்க பாடுபட வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

இதில் கோட்டாசியர் துரைசாமி, பேருராட்சிகளின் உதவி இயக்குநர் இப்ராகிம் ஷா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாயன் ,ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், நந்தகுமார், ஊட்டி நகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ஸ்ரீதரன் உல்லத்தி ஊராட்சி தலைவர் சந்தோ ஷ்குமார் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர். 

அனைவரும் இணைந்து சாலை ஓரம் மற்றும் வனப்பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டு குப்பைகளை சேகரித்தனர். இந்த தூய்மை பணியில் பல்வேறு அமைப்பினர் சமூக ஆர்வ லர்கள் பொது மக்கள் தூய்மை பணியாளர்கள் என திரளானோர் கலந்து கொண்டு தூய்மை பணியினை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...