திருப்பூர் அருகே நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து வருவதாக பொதுமக்கள் புகார்!

திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் ஏராளமான சாய ஆலைகள் செயல்பட்டு வரும் நிலையில், அப்பகுதியில் ஆழ்துளை கிணற்றில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரில் சாய கழிவுகள் கலந்து நிறம் மாறி வருவதாக கூறி, அப்பகுதி மக்கள் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த சொர்ணபுரி கார்டன் பகுதியில் நிலத்தடி நீரில் சாயக்கழிவு கலந்து. தண்ணீர் நிறம் மாறி வருவதாக பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் சொர்ணபுரி கார்டன் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியை சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் நிறம் மாறி மாசடைந்து வருவதாக கூறப்படுகிறது. 

அந்த தண்ணீரை பயன்படுத்துவதால் தங்களுக்கும் குழந்தைகளுக்கும் தோல் அரிப்பு போன்ற உடல் நல கோளாறுகள் ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் கெடும் வகையில் சாய ஆலைகள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இதுதொடர்பாக அரசு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, வருங்கால சந்ததியை பாதிக்கும் வகையில் நிலத்தடிநீரை கழிவாக மாற்றிய சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



இந்நிலையில் மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மாசடைந்த நிலத்தடி நீரையும் பாட்டிலில் அடைத்து கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...