பெண் குழந்தைகள் கல்விக்காக நாடு முழுவதும் கார் பயணம் செய்து கோவை இளைஞர் சாதனை!

கோவையை சேர்ந்த சைக்கிளிஸ் விஷ்ணுராம் என்ற இளைஞர், பெண் குழந்தைகள் கல்விக்காக நாட்டின் 4 எல்லைகளை கார் பயணத்தின் மூலம் குறைந்த மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த பயணத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதியான ரூ.6 லட்சத்தை ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தார்.



கோவை: பெண் குழந்தைகள் கல்விக்காக நாடு முழுவதும் கோவையை சேர்ந்த இளைஞர் ஒருவர் விழிப்புணர்வு கார் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். 



கோவை சாய்பாபா காலனி பகுதி சேர்ந்தவர் சைக்கிள்ஸ்ட் விஷ்ணு ராம். இவர் பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் முன்னதாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்த நிலையில், பெண் குழந்தை கல்வி மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், நாடு முழுவதும் நான்கு திசைகளையும் இணைக்கும் விதமாக ரவுண்ட் ட்ரிப் முறையில் கார் பயணம் மேற்கொண்டார். 



சென்னையில் மே 28 ஆம் தேதி காலை காவல்துறை அதிகாரி சங்கர் கொடியசைத்து ஆரம்பித்து வைக்க, கார் பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து இந்தியாவின் கிழக்குப் பகுதியை நோக்கி அருணாச்சல பிரதேச மாநிலம் தேஜு சென்றார். அங்கிருந்து வடக்கு நோக்கி காஷ்மீர் லடாக் சென்றுள்ளார்.

பின்னர், இந்தியாவின் மேற்கு எல்லையான குஜராத் மாநிலம் பாகிஸ்தான் பார்டரான கோட்டேஸ்வர் பகுதிக்கு சென்றார். அங்கிருந்து இந்தியாவின் தெற்கு எல்லையான தமிழ்நாட்டின் காஷ்மீருக்கு நோக்கி சென்ற விஷ்ணு, மீண்டும் கார் பயணத்தை ஆரம்பித்த சென்னைக்கே ஜூன் 7 அன்று வந்தடைந்தார்.

பத்து நாட்கள் மற்றும் 16 மணி நேர இந்த ரவுண்ட் ட்ரிப் பயணத்தை விஷ்ணு செய்திருக்கின்றார். 16 மாநிலங்கள் நான்கு யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி 12,226 கிலோமீட்டர் தூரம் பயணித்த விஷ்ணு ராம், குறைந்த நேரத்தில் இந்தியாவின் நான்கு எல்லைகளையும் கார் பயணத்தில் சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார். 

இவரது இந்த சாதனையை World Record Union, Asia Book of Record, India Book of Record அங்கீகரித்து, இந்திய நாட்டின் நான்கு எல்லைகளை குறைந்த நேரத்தில் கார் பயணம் மூலமாக கடந்த சாதனையாளர் என விருது வழங்கி கெளரவித்தது. 

30 முதல் 35 மணி நேரம் வரை சில நேரம் தூங்காமலும், நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொண்டும், கரடு முரடான சாலைகள் முதல் ராஜஸ்தான் புழுதி, அருணாச்சல பிரதேச குளிர், காஷ்மீர் பனியென பல கால சூழ்நிலைகளையும், தட்ப வெப்ப நிலைகளையும் விஷ்ணு ராம் எதிர்கொண்டு, கடும் சவால்களுடனே இந்த சாகச கார் பயணத்தை மேற்கொண்டு நாட்டின் நான்கு பகுதிகளுக்கும் பயணித்து சாதனையை புரிந்து இருக்கின்றார். 



கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் கார்ப்பரேஷன் கமிஷனர் பிரதாப் முன்னிலையில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. 



இந்த நிலையிலே இந்த பயணத்தின் மூலமாகவும் நண்பர்கள் உதவியுடனும் திரட்டப்பட்ட 6 லட்சம் ரூபாய் நிதியை, காசோலையாக கலெக்டர் மற்றும் கார்ப்பரேசன் கமிஷனரிடம் விஷ்ணு ராம் ஒப்படைத்தார்.

இந்த நிதி பெண் குழந்தைகளின் கல்விக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், பெண் குழந்தைகள் பயிலும் பள்ளிக்கூடங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் செலவிட உத்தேசக்கப்பட்டிருக்கின்றன. 

அடுத்ததாக பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் வகையில் சைக்கிளில் நான்கு எல்லைகளையும் கடக்க திட்டமிட்டு இருப்பதாக விஷ்ணு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...