திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி ஏந்தி போராட போவதாக மக்கள் அறிவிப்பு!

திருப்பூர் மாநகராட்சியின் 45ஆவது வார்டுக்குட்பட்ட காயிதே மில்லத் நகரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேற்கொண்டு பணிகள் நடைபெற்று வரும் பட்சத்தில், கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட போவதாக அறிவித்துள்ளனர்.

திருப்பூரில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய எதிர்ப்பு இயக்க கூட்டமைப்பு சார்பாக வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாநகராட்சியில், 45வது வார்டுக்கு உட்பட்ட காயிதே மில்லத் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 130 குடும்பங்களை நீர்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதாக கூறி, அப்பகுதி வீடு கட்டுவதற்கு ஏற்ற தகுந்ததாக இல்லை என காரணம் காட்டி அவர்களை காலி செய்யப்பட்டனர்.

தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் தொடங்கியபோது அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 45வது வார்டு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருடன் ஆலோசனை நடத்திய போதும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அப்போதைய மாவட்ட ஆட்சியர் வினித், பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவளித்து விட்டதாக தமிழக அரசிடம் தவறான கருத்தை தெரிவித்ததாக கூறுகின்றனர். இதனால், அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தொடர்ந்து வரும் நிலையில் 30 ஆயிரத்திற்கும் மேல் பொதுமக்கள் வசித்து வரக்கூடிய இப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.

இதனால், அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். மேற்கொண்டு பணிகள் நடக்குமேயானால் வருகின்ற திங்கட்கிழமை 45வது வார்டு பகுதி முழுவதும் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இத்திட்டம் நிறைவேற்றப்படாது.

45வது வார்டு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை நிறுத்தும் வரை தங்களது போராட்டம் தொடரும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...