மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு - திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்!

தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பல்வேறு கோரிகைக்களை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருப்பூர்: தமிழக அரசின் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சமீபத்தில் வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை 14 பைசா முதல் 21 பைசா வரை அதிகரித்து அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மதுக்கடைகளை மூடுவதாக மக்களிடம் தெரிவித்து மதுக்கடைகளை மூடினால் தமிழக அரசின் வருவாய் பாதிக்கப்படும் என நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல்,

அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...