செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடப்பதற்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை - வானதி சீனிவாசன் கருத்து!

கூட்டணி குறித்து பாஜகவின் தேசிய தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்க உறுப்பினர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வோம் என்றும் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவை: செந்தில்பாலாஜி வீட்டில் சோதனை நடப்பதற்கும், அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்!

கோவையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்த நன்மைகள் குறித்து மக்களிடம் எடுத்து சொல்லி வருகின்றோம். மத்திய அரசின் திட்டத்தின் செயல்பாடுகளில் ஏதேனும் சுணக்கம் இருந்தால் அதை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் கலந்து பேசி சரி செய்வதுடன், புதிய கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

கோவை மாவட்ட பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தபெதிகவினர் 3 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை, பெட்ரோல் குண்டு வீசி ஒரு இயக்கத்தை மிரட்டி விட முடியாது என்பதற்கு பாஜக உதாரணமாக இருக்கிறது.

நேற்று என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் , அறையை உட்புறமாக பூட்ட முயன்று இருக்கின்றார், அந்த நபரை அலுவலகத்தில் இருந்த எனது உதவியாளர் வெளியேற்றி இருக்கின்றார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த நபர் வாகனம் மோதி உயிரிழந்ததாக கேள்விபட்டேன். சம்பந்தப்பட்ட நபர் யார், அவர் எந்த பின்னணியில் இருந்து அலுவலகத்திற்கு நுழைந்தார், என்ன நோக்கம் என்பது குறித்து தெரியவில்லை. இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் பேசியிருக்கிறோம், யார் அந்த நபர் என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்.

கூட்டணி தொடர்பான விஷயங்களில் அகில இந்திய தலைமை என்ன சொல்கின்றனரோ, அதற்கு நாங்கள் கட்டுப்பட்டவர்கள், கூட்டணி தொடர்பாக அதிமுகவினரின் விமர்சனமாக இருந்தாலும் அதற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. கூட்டணியை பற்றி பேச தேசிய தலைமைகள் இருக்கிறது.அவர்கள் சொல்வதை செய்ய நாங்கள் இருக்கிறோம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை நடத்துவதற்கும், அரசியலுக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு கிடைக்க கூடிய தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்துகிறார்கள், தவறுகள் , முறைகேடுகள் இருந்தால் அதற்கான விசாரணைகளை சந்தித்து ஆக வேண்டும்.

அதிமுகவுடன் ஏற்பட்டு இருக்கும் கருத்து மோதல் குறித்து நான் கருத்து சொல்ல விரும்புவதில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலக்கத்தில் பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு செல்வோம் என்பது உறுதி.

மல்யுத்த வீராங்கனை விவகாரத்தில் தவறு செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்காது, அதே நேரத்தில் அதற்கு அரசியல் உள்நோக்கம் இருந்தால் அதையும் எதிர்கொள்ளும். தமிழர் ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்பதில் சர்ச்சை இல்லை, தமிழ்நாட்டின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக அது சொல்லப்பட்டது.

பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறது என்ற கருத்துக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை. இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் ஜெயித்து பிரதமராக வாய்ப்பு இருக்கிறது. எனக்கு ஒருபுறம் கட்சியின் மாநில தலைவர், அவருக்குரிய மரியாதை, அவர் கருத்துக்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும்.

இன்னொரு பக்கம் தேசிய தலைமை கூட்டணியை பற்றி முடிவு எடுக்கும் பொழுது அது தொடர்பாகவும், கூட்டணியை எடுத்துச் செல்லும் பங்கும் இருக்கிறது. எனவே இதுபோன்ற நேரங்களில் எந்த கருத்தும் கூறாமல் இருப்பதுதான் நல்லது என்பது என் நிலைப்பாடு. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...