கோவை தெற்கு எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் - தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சிசிடிவி!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்து, கதவை பூட்டிக்கொண்ட நபரை அங்கிருந்தவர்கள் வெளியேற்றிய நிலையில் அந்த நபர், சிறிது நேரத்தில், பேருந்து ஒன்றின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை தெற்கு எம்.எல்.ஏ அலுவலகத்திற்குள் அத்துமீறி சென்றதால் வெளியேற்றப்பட்ட நபர், பேருந்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றார்.



இந்த அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார். கதவை சாத்திய மர்மநபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் பிடித்து வெளியேற்றினார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே சாலையை கடந்து சென்ற அந்த நபர் திடீரென அரசு பேருந்தின் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...