அழகப்பா பல்கலை.‌ - கற்பகம்‌ நிகர்நிலை பல்கலை. இடையே‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌!

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம் முதுகலை மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்கள்‌ 2 பல்கலைக்கழகங்களுக்குள்‌ இடம்‌ மாறி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‌

கோவை: கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகம் - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்,‌ கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழகத்துடன்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ செய்யும்‌ நிகழ்வு கடந்த ஜூன் 13ஆம் தேதி அழகப்பா பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.



இந்த நிகழ்வில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்‌ பேராசிரியர்‌. க.ரவி‌, கற்பகம்‌ நிகாநிலை பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ டாக்டர்‌. பி. வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

கற்பகம்‌ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டுத்‌ துறை பேராசிரியர்‌ டாக்டர்‌. வி.பார்த்தசாரதி மற்றும்‌ மூத்த பேராசிரியர்களான உயிரி தகவலியல்‌ துறை தலைவர்‌ J. ஜெயகாந்தன்‌, பதிவாளர்‌ (பொ) S. ராஜமோகன்‌, உள் தர மதிப்பீட்டுப்‌ பிரிவு தலைவர்‌ அலமேலு, மாணவர்கள்‌ நலன்‌ முதன்மையர்‌ வேதிராஜன்‌, திட்டம்‌ மற்றும்‌ வளர்ச்சி பிரிவு தனி அலுவலர்‌, பேராசிரியர் பத்மபிரியா மற்றும்‌ மற்ற பேராசிரியர்கள்‌ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்ச்சியில், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி பேசியதாவது, இந்த உடன்படிக்கையின் படி பல்கலைக்கழக பேராசிரியர்கள்‌, முதுகலை மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்கள்‌ 2 பல்கலைக்கழகங்களுக்குள்‌ இடம்‌ மாறி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உதவும்‌.

 à®®à¯‡à®²à¯à®®à¯‌, அழகப்பா பல்கலைக்கழக கல்வி மற்றும்‌ ஆராய்ச்சி தரத்தினை தேசிய மற்றும்‌ உலக அளவில்‌ உயாத்திக்கொள்ள இவ்வுடன்படிக்கை உதவும்‌.

இவ்வுடன்படிக்கையின்படி கூட்டு ஆராய்ச்சிகள்‌ மேற்கொள்ளும்போது அரிய தகவல்களை பரிமாறுவதற்கும்‌, கல்வி நிறுவனங்களின்‌ தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதற்கும்‌, அந்த தொழில்நுட்பத்தினை இந்த பல்கலைகழகத்திற்கு கொண்டு வரவும்‌ உதவியாக இருக்கும்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழக துணைவேந்தா்‌ டாக்டர்‌. பி.வெங்கடாசலபதி பேசியதாவது, மாணவர்களுக்கு தேசிய மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனங்களில்‌ வேலை வாய்ப்புகளும்‌, ஆராய்ச்சி கல்விக்கும்‌ வழிவகுக்கும்‌. மேலும்‌ புதிய ஆராய்ச்சி கண்டூபிடிப்புகளின்‌ மூலம்‌ நாட்டு மக்களும்‌ பயனடைவார்கள்‌.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ ஏற்பட காரணமாக இருந்த உயிரித்‌ தகவலியல்‌ துறைத்‌ தலைவா்‌ மூத்த பேராசிரியா்‌. ஜெ. ஜெயகாந்தன்‌ அவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்‌ துணைவேந்தர்‌ பாராட்டினார்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...