கோவை பேரூர் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநர் கைது!

பேரூர் அடுத்த பச்சாபாளையத்தில் தனியார் கல்லூரி விரிவுரையாளர் ஷைனி குரூடோபெல் (29). என்பவரிடம் இருந்து 18 சவரன் நகைகளை திருடிய கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பவரை போலீசார் கைது செய்து நகைகளை பறிமுதல் செய்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கோவை: பச்சாபாளையம் அருகே கல்லூரி விரிவுரையாளரின் 18 சவரன் தங்க நகைகளை திருடிய டாக்சி ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் ஷைனி குரூடோபெல் (29). இவர் கோவை பச்சாபாளையம் பகுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை தனது சொந்த ஊரான கூடலூர் சென்ற ஷைனி மீண்டும் நேற்று கோவைக்கு வந்துள்ளார்.

அப்போது பேருந்து நிலையத்திலிருந்து கால் டாக்சி மூலம் பச்சாபாளையம் வந்துள்ளார். அப்போது, தனது உடைமைகளை சோதனை செய்த போது, காரின் பின்புறம் வைத்திருந்த பையில் இருந்த 18 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து அவர் பேரூர் காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில், 18 சவரன் நகையை திருடியது கோவையை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுநர் வினோத்குமார் (31) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 18 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...