அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் அடைப்பு - மருத்துவ அறிக்கையில் தகவல்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 முக்கியமான ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் அவருக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைப்பதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு மல்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த விவரம் நண்பகல் 12 மணியளவில் வெளியிடப்பட்டது.

அந்த மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறியிருப்பதாவது,

47 வயதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று காலை 10.40 மணியளவில் இருதய ரத்த நாள பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில், 3 முக்கியமான ரத்தக் குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...