கோவையில் போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் தப்பியோட்டியதால் பரபரப்பு!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து சென்ற நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பசி எடுப்பதாக கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தப்பியோடிய நிலையில், அவரை பிடித்து உணவு வாங்கி கொடுத்து சமாதானப்படுத்தினர்.



கோவை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவை சேர்ந்தவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்ற போது காவலர்களிடம் இருந்து தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரஷ்யா நாட்டை சேர்ந்த நபர் போதை பொருள் வழக்கில் திருச்சி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவையில் உள்ள இன்றியமையாத பண்டகங்கள் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். 

நீதிமன்ற வளாகத்தில் பிற்பகல் 2 மணியளவில், பசிப்பதாக கூறி காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து திடீரென காவலர்களிடம் இருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. 



அவரை பின் தொடர்ந்த காவலர்கள் அவரை சமாதானம் செய்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவகத்தில் உணவு வாங்கிக் கொடுத்து சமாதானம் படுத்தினர். 

இந்த சம்பவம் நீதிமன்றத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...