கோவை பேரூர் அருகே கஞ்சா விற்ற இளைஞர் கைது - 3 கிலோ கஞ்சா பறிமுதல்!

கோவை பேரூர் அருகே புட்டுவிக்கி சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை பிடித்து தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், அவரிடம் கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன் (25) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்த 3 கிலோ அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பேரூர் சாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை பேரூர் சாலை புட்டுவிக்கி அருகே தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, புட்டு விக்கி சாலை கந்தசாமி கவுண்டர் தோட்டம் அருகே சந்தேகத்திற்கு இடமாக இளைஞர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். 

அப்போது அவரிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில், பிடிபட்ட நபர் கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த முருகன் மகன் நவீன் (25) என்பதும், பெயிண்டர் வேலை செய்து வந்த இவர், தொழிலாளர்களை குறி வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

கோவை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2023 முதல் தற்போது வரை தனிப்படை போலீசாரால் இதுவரை போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 347 நபர்கள் மீது 260 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 516 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த கண்காணிப்பு வேட்டை தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...