மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய கல்லூரி மாணவர் - மடக்கி பிடித்த பொதுமக்கள்!

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை அச்சத்திற்குள்ளாக்கிய சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பவரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த இளைஞரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

கோவை: பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். 

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு வழக்கம் போல அதிகளவு வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சாலையில் மலுமிச்சம்பட்டியில் இருந்து சுந்தராபுரம் நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்ததோடு, எல்ஐசி காலனி அருகே வரும்போது இடதுபுறமும், வலது புறமும் வளைந்து வளைந்து சென்றதாக தெரிகிறது.

இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தினர். அதே நேரத்தில் காரின் பின்னால் வந்த மற்ற இளைஞர்கள் வேகமாக துரத்தி சென்று காரை மடக்கி பிடித்தனர். அப்போது அந்த காரை ஓட்டி வந்த இளைஞர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போக்குவரத்து  போலீசார் இளைஞரை சோதனை செய்தபோது அவர் மது போதையில் இருந்தது உறுதியானது. 

இந்நிலையில் காரை பறிமுதல் செய்த போலீசார் வேறு இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விசாரணையில் பிடிபட்ட இளைஞர் சுந்தராபுரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் (21) என்பதும், இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் காரை வேகமாகவும் மது போதைகளும் இயக்கி வந்ததற்காக அபராதம் விதித்தனர். மேலும் இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட கூடாது என எச்சரித்து அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். 

மது போதை இளைஞரால் சுந்தராபுரம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...